கோவை திமுக ஒன்றிய செயலாளர் பதவி பறிப்பு..!
Nov 19, 2025, 13:12 IST1763538171411
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம் அ.தி.மு.க.வினருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பதவியில் இருந்துநீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக ஆர்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் கட்சிப் பதவியை பறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிமுகவினருடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. திமுகவினருடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வரும் முதலமைச்சர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


