“ஒருவரின் உருவப் படத்தை எரிப்பது, அந்த நபரை எரிப்பது போன்ற அர்த்தமல்ல”- வைஷ்ணவி
போகி பண்டிகையான நேற்று தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய்யின் புகைப்படம் பொறித்த டி-ஷர்ட்டை எரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கு தவெக தொண்டர்கள் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், வைஷ்ணவி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஒருவரின் உருவப் படத்தை எரிப்பது, அந்த நபரை எரிப்பது போன்ற அர்த்தமல்ல. அது அவருடைய கொள்கைகளுக்கும், மக்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும், எதிரான ஜனநாயகப் போராட்டமே! இது மாதிரியான போராட்டங்கள் நிறையவே நடைபெற்றுள்ளன! சனாதனத்தை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய போது அவர் உருவ பொம்மையை எரித்தார்களே? அண்ணாமலை அவர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அவர்களின் உருவ பொம்மை எரிக்கப்பட்டுள்ளது! டிரம்ப் அவர்களின் உருவ பொம்மை எரிக்கப்பட்டுள்ளது!
ஒருவரின் உருவப் படத்தை எரிப்பது, அந்த நபரை எரிப்பது போன்ற அர்த்தமல்ல.
— Vaishnavi (@vaishnavi_cbe) January 15, 2026
அது அவருடைய கொள்கைகளுக்கும், மக்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும், எதிரான ஜனநாயகப் போராட்டமே! இது மாதிரியான போராட்டங்கள் நிறையவே நடைபெற்றுள்ளன! சனாதனத்தை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய போது அவர் உருவ… pic.twitter.com/VYNdXy0UkO
திரு. விஜய் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னணியில், குழந்தைகள் உட்பட 41 உயிர்கள் பறிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அத்தகைய சூழலில், மக்களுக்காக அவர் இதுவரை முன்னெடுத்த பணிகள் என்ன என்பதே என்னுடைய கேள்வி! உண்மையில், அவரது கட்சி உருவாக்கியதாகப் பேசப்படுவது சமூக பொறுப்பற்ற செயல்கள்,
ஆபாச வாதங்களை ஊக்குவிக்கும் போக்குகள்,
சமூக சீர்கேட்டை வளர்க்கும் நடைமுறைகள் இவைகளே என்றால், அதை கேள்வி கேட்பது மக்களின் உரிமை.
ஜனநாயகத்தில் கேள்வி எழுப்புவதும், எதிர்ப்பதும் குற்றமல்ல.
அதைத் தவிர்த்து உருவாகும் அரசியல் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் நான் சந்திக்க தயாராகவே உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


