‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக பரப்புரையை தொடங்கும் திமுக!

 
stalin

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக பரப்புரையை திமுக தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

stalin

 நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.  72 மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், 234 தொகுதி பார்வையாளர்கள் மற்றும் முக்கியமான மாநில நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.

stalin
இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது , அடிமட்ட தொண்டர்கள் வரையிலான அனைத்து விவரங்களையும் தலைமை கழகம் அறிந்துள்ளது; மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு  அரசியலிலும், கட்சியிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்

40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்;

பிப்.26ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை வீடுவீடாக மேற்கொள்ள வேண்டும்;

பாஜகவின் அநீதிகள் மற்றும் திமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.