திமுகவின் அடுத்த மூவ்..! கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு..!

 
1

தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.ஒருபுறம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர் அரசியல் கட்சியினர். மறுபக்கம் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. 

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.


டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் நான்கில், அக்கட்சி வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரு கட்சிகளும் தலா இரு தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, மூன்று தொகுதிகள் ஒதுக்கியதில், ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகள் இடம் பெறுவதால், அந்த கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிட குறைவான தொகுதி வழங்க தி.மு.க., முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

1