"அதிமுக கூட்டணி பற்றி விஷமத்தனமான பிரசாரங்களை சிலர் பரப்புகின்றனர்" - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

 
tn

"தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்" என்ற கருப்பொருள் பதாகையை வெளியிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி .

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , நீட் தேர்வு ரத்து என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?; நீட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கும் அளவிற்கு திமுக எம்.பி.க்கள் அழுத்தம் தரவில்லை; நீட் தேர்வு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எழுப்பவில்லை. நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள்தான் சிறப்பாக செயல்பட்டு அதிக கேள்விகள் கேட்டுள்ளனர்; காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது அதிமுகதான்.

admk

பாஜகவுடன் யார் ரகசிய உடன்பாடுடன் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்க்கிறார்கள்; GO Back Modi என்று கூறியவர்கள் இன்று தற்போது Welcome Modi என்று கூறுகின்றனர் இரட்டை நிலைப்பாட்டை திமுக கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது; கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பிரதமர் மோடியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

EPS
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அதிமுக கூட்டணியை அறிவிப்போம். தேர்தல் பரப்புரைகளை இன்று முதல் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதிமுக கூட்டணி பற்றி விஷமத்தனமான பிரசாரங்களை சிலர் பரப்புகின்றனர். இன்று முதல் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். விஷமத் தனதான பிரசாரத்தை பரப்பி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும் என்றார்.