இந்த கோவில் பற்றி தெரியுமா..? சென்னையில் கிரிக்கெட் விநாயகர் கோயில் ரொம்ப பேமஸ்..!

 
1 1

சென்னையில் கிரிக்கெட்டுக்கென்று ஒரு தனி விநாயகர் கோயில் சுமார் 25 ஆண்டுகளாக உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்... சென்னை அண்ணா நகர், புது ஆவடி சாலையில் 'கிரிக்கெட் விநாயகர்' கோயில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இருந்து வருகிறது.

இந்த கோயிலில், கிரிக்கெட் அணியில் 11 பேர் இடம்பெற்று இருப்பதை குறிக்கும் வகையில் 11 தலை கொண்ட விநாயகர் சிலை, ஒரு கையில் பேட் மற்றொரு கையில் பந்தை ஏந்தியவாறு உள்ள விநாயகர், கீப்பிங் செய்யும் விநாயகர், கிரிக்கெட் வீரர்களுக்கு உதவும் விநாயகர் என 6 வகை விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகள் மட்டுமல்லாது, விநாயகருக்கு 108 மந்திரங்கள் ஓதுவது போன்று, இந்த கிரிக்கெட் விநாயகருக்கும், ஓம் பவுண்டரியாய நமஹ, ஓம் சிக்ஸராய நமஹ, ஓம் விக்கெட் கீப்பராய நமஹ, ஓம் ஆல் ரவுண்டராய நமஹ என 108 கிரிக்கெட் மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.


நாள் ஆக ஆக, கிரிக்கெட் விநாயகர் பிரபலமாகத் தொடங்கினார்.இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச போட்டிகளில், குறிப்பாக உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் வெற்றி அடைய வேண்டும் என இன்று வரை கிரிக்கெட் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது.