இது தெரியுமா ? சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் ரஜினியாக நடித்த மனோஜ்..!

 
1

அமெரிக்காவில் நடிப்பு குறித்து படித்த மனோஜ், சினிமாவை கற்றுக்கொள்ள இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினர்.

மகனின் சினிமா ஆர்வத்தை பார்த்து பாரதிராஜா ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் மனோஜை ஹீரோவாக அறிமுகம் செய்தார். மனோஜுக்கு நடிப்பு தாண்டி படம் இயக்குவதிலும் ஆர்வம் இருந்து வந்தது. பல இயக்குனர்களின் படங்களில் மனோஜ் பணிபுரிந்துள்ளார்.

அப்படிதான் இந்திய அளவில் ப்ளாக் பஸ்ட்ராக விளங்கிய எந்திரன் படத்திலும் மனோஜ் நடித்துள்ளார். வசீகரன், சிட்டி காட்சிகளில் ரஜினிக்கு டூப்பாக மனோஜ் நடித்துள்ளார். இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.