இது தெரியுமா ? இந்த பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடக்கூடாதாம்..!

 
1 1

நெல்லிக்காய் அனைவருக்கு ஏற்றது அல்ல என்கின்றது ஒரு ஆய்வு. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பார்மசூட்டிகல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (International Journal of Pharmaceutical Sciences and Research) என்ற ஆய்வின்படி, நெல்லிக்காயில் உள்ள உயிரியல் கலவைகள் (bioactive compounds) உணர்திறன் உள்ள நபர்களுக்கு ஒவ்வாமையாக செயல்பட்டு, அரிப்பு, வீக்கம் அல்லது தோல் எரிச்சலைத் தூண்டலாம் என்கிறது.

அதன் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், சில குறிப்பிட்ட நிலைமைகள் அல்லது உணர்திறன் கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அந்த வகையில், யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறைந்த ரத்த சர்க்கரை உள்ளவர்கள் (hypoglycaemia): நெல்லிக்காய் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், ஹைபோகிளைசீமியா உள்ளவர்களுக்கு அவர்களின் நிலைமையை மோசமாக்கும். நெல்லிக்காயில் அதிக அளவு பாலிபினால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. ஏற்கனவே குறைந்த ரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு அவர்களின் ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறையக்கூடும். இதனால் தலைச்சுற்றல், சோர்வு, மற்றும் மயக்கம் போன்றவைக்கு வழிவகுக்கும்.

நெல்லிக்காய் இயற்கையாகவே அமிலத் தன்மையைக் கொண்டுள்ளது. அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் சில நேரங்களில் வயிற்றின் உட்புறத்தை எரிச்சலடையச் செய்யலாம். இரைப்பைக் குடல் உணர்திறன், அமில ரிஃப்ளக்ஸ் அல்லது புண்கள் போன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்கள், நெல்லிக்காயை உட்கொண்ட பிறகு நெஞ்செரிச்சல், வீக்கம் அல்லது வயிற்று வலி போன்றவற்றை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம். நெல்லிக்காய் இரைப்பை குடல் பாதுகாப்பு பண்புகளை கொண்டிருந்தாலும், அதன் புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உணர்திறன் உள்ள நபர்களுக்கு, குறிப்பாக பச்சையாக அல்லது வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அமிலத்தன்மையை தூண்டலாம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலில் ஆக்ஸலேட்டாக மாற்றப்படுகிறது. இந்த கலவை சிறுநீரக கற்கள், குறிப்பாக கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் உருவாவதற்கு பங்களிக்கும். சிறுநீரகக் கற்களின் வரலாறு அல்லது சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு, நெல்லிக்காயை அடிக்கடி அல்லது அதிக அளவில் உட்கொள்வது ஆபத்தை அதிகரிக்கலாம். ஒரு ஆய்வு, அதிக வைட்டமின் சி உட்கொள்ளல் மற்றும் அதிகரித்த சிறுநீர் ஆக்ஸலேட் வெளியேற்றத்திற்கு இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்ததுள்ளது.

கர்ப்ப காலத்தில் மிதமான அளவில் நெல்லிக்காய் உட்கொள்வது பொதுவாக பாதுகாப்பானது மற்றும் நன்மை பயக்கும் என்றாலும், அதிகப்படியான நுகர்வு, குறிப்பாக பச்சையாக அல்லது செறிவூட்டப்பட்ட வடிவங்களில், இரைப்பைக் குடல் அசௌகரியம், வயிற்றுப்போக்கு அல்லது உடல் அதிகப்படியாக குளிர்ச்சியடைவதற்கு வழிவகுக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக அளவு நெல்லிக்காய் செரிமான அமைப்பை அதிகமாகத் தூண்டலாம் அல்லது கருப்பையின் தொனியைப் பாதிக்கலாம் என்று கூறுகின்றன.