இந்த மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள் தெரியுமா ?

 
1

புதிதாகத் திருமணம் ஆன பெண் ஏன் முதல் ஆடி மாதத்தில் தன் கணவரைப் பிரிந்திருக்கவேண்டும்? ‘ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?

சூரியனை பூமி சுற்றி வரும் 360 டிகிரி வட்டப் பாதையில், பூமி சூரியனைக் கடக்கும் ஒவ்வொரு 30 டிகிரியும் ஒவ்வொரு மாதமாகின்றன. இந்த 12 மாதங்களும் உத்தராயணம், தட்சிணாயணம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இதில் ஆடி மாதம் தட்சிணாயணத்தின் தொடக்க மாதமாக அமைகின்றது. வெயில் கொடுமையில் இருந்து பூமி விடுபடுகிறது. எனவே ஆடி மாதம் சிறப்பு பெறுவதுடன், அம்மனுக்கு உகந்த மாதமாகவும் வழிபடப்படுகிறது.

ஆடிமாதத்தில் புது மணத்தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தைகள் பிறக்கும். அப்போது வெயில் உக்கிரமாக இருக்கும், போதாக்குறைக்கு அக்னி நட்சத்திரமாக இருக்கும். அதனால்தான் புது மணத் தம்பதியைப் பிரித்து வைத்தனர்.  

ஆனால், 'பஞ்சாங்கங்களில் ஆடியில் முகூர்த்தம் உள்ளதே, சில வகுப்பினர் ஆடியில் திருமணம் செய்கின்றார்களே', என்றெல்லாம் பலர் கேள்விகளைக் கேட்கின்றனர். இதில் மனக் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றும் சமூகத்தினர் அல்லது மனக் கட்டுப்பாடு உள்ளவர்கள், ஆடியில் திருமணம் செய்யலாம். சாந்தி முகூர்த்தத்தை ஆவணியில் சுபநாள்களாகப் பார்த்துத்தான் அமைப்பார்கள்'

 புது மணத்தம்பதிகள் இந்த மாதத்தில் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தைகள் பிறக்கும். அப்போது அக்னி நட்சத்திரம் காரணமாக வெயில் உக்கிரமாக இருக்கும். இதனால் தாய், செய் உடல் நலம் பாதிக்கும் என்பது தான் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நம்முடைய முன்னோர்களின் கூற்றுப்படி சித்திரையில் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்று  கூறப்படுகிறது.

புனித நீராடல்
ஆடி 18-ம் பெருக்கு நாள் என்பது தட்சணாயன காலத்தில் முதல் 18 நாள்கள் சிறப்பானதாக அமைகின்றது. இந்த நாளில் புது மணத்தம்பதிகள் ஆறு, குளம், கடலில் நீராடி மனக்கட்டுப்பாட்டுடன் முன் 18 நாள்களும் பின் 18 நாள்களுமாக விரதம் இருந்தால், வம்சம் தழைத்தோங்கும்.