அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவர்..!
உ.பி ஷாம்லி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வக்கார் சித்திக் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திக்கை காண, அவரது வருங்கால மனைவி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
அப்போது மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்த அறைக்குச் சென்ற இருவரும், அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்றி விட்டு நடனமாடியுள்ளனர்.
இதனை அங்கிருந்த நோயாளிகள் வீடியோவாக எடுத்துப் பதிவேற்ற வைரலானது. ப்ரீத் இதனைக் கண்ட பலரும், மருத்துவர் வக்கார் சித்திக்கின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
இனி இதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து விசாரணைக்குப் பின்னர் மருத்துவர் வக்கார் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
उत्तर प्रदेश के शामली स्थित एक सरकारी अस्पताल में अफकार सिद्दीकी नामक डॉक्टर ड्यूटी रूम में एक महिला के साथ नाच रहे हैं। संभवतः महिला उनकी मंगेतर है।
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) November 21, 2025
इस पर कार्रवाई होनी चाहिए। अस्पतालों में इलाज की कमी से मरीज मर रहे हैं और ये जनाब महिला संग नाच रहे हैं। pic.twitter.com/8OHpJSBIIM


