நடிகர் விஜய் விஷ்வாவுக்கு டாக்டர் பட்டம்

 
vv

நடிகர் விஜய் விஷ்வாவுக்கு சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டிருக்கிறது.

 நடிகர் விஷால் தற்போது சாயம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.   இவர் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்ததன் மூலம் மக்களிடையே இடம்பிடித்தார். 

அதே போல் கொரோனா காலங்களில் ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த தொழிலாளர்களுக்கு உணவு , அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி தொடர்ந்து உதவி செய்து வந்தார் விஜய் விஸ்வா.  

vv2

திரைத்துறையில் இருக்கும் பலருக்கும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர் உதவிகள் செய்தார்.

 இந்நிலையில் ஒருநாள் கொரோனா தொற்று  அதிகரித்தபோது மக்களுக்கு சேவை செய்ததற்காக சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து இருக்கிறது.   மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.   சென்னை மாவட்ட நீதிபதி வைத்தியலிங்கம் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார்.

 2020- 2021ஆம் ஆண்டு விழா காலங்களில் மக்களுக்கு சேவை செய்வதற்காக நடிகர் விஜய் விஸ்வாவுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்று விழாவில் கூறப்பட்டது.   நடிகர் விஜய் விஸ்வாவுக்கு  ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழுவில் ஒரு உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.