சுற்றுலா பயணிகள் ஷாக்... தொட்டபெட்டா சிகரம் மூடல்
Aug 19, 2024, 19:55 IST1724077548000
தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை தொட்டபெட்டா. உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இதன் உயரம் 2623 மீட்டர் ஆகும். மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும். இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிமாநிலங்கள், மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர்.
இந்நிலையில் உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அங்குள்ள சாலையில் Fastag கட்டணச் சாவடிக்கான இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் மூடப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.