கழுதை கறி சாப்பிட்டால் உடல் வலிமை பெறுகிறதாம்...ஆந்திராவுக்கு கடத்தப்படும் கழுதைகள்

 
k2

கழுதை கறி சாப்பிட்டால் உடல் வலிமை என்கிறது என்ற நம்பிக்கையில் ஆந்திர மாநிலத்தில்  கழுதை இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.  இதற்காக தமிழ்நாட்டிலிருந்து கழுதைகளை கடத்திச் செல்கிறார்கள்.   வளர்ப்பவர்களிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கிச் செல்லாமல் திருடிச் சென்று விடுகிறார்கள். அப்படி ஆரணியில் இருந்து  கடத்திச் செல்லப்பட்ட 6  கழுதைகள் வேலூரில்  மீட்கப்பட்டுள்ளன.

 வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கமாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .   அப்போது மினி வேன் ஒன்றில் கழுதைகளை ஏற்றுக்கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் சென்றிருக்கிறார்கள்.   போலீசாரை கண்டதும் வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றிருக்கிறார்கள்.  இதனால்   சந்தேகம் கொண்ட போலீசார் வாகனத்தை விரட்டி சென்று பிடித்திருக்கிறார்கள்.

மக்கான் சிக்னல் அருகே வாகனத்தை மடக்கி பிடித்ததும் வேனில் இருந்த 4 பேர் தப்பி ஓடியிருக்கிறார்கள்.  ஓட்டுநர் சீனிவாசலால் என்பவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விட்டனர் .  அவரிடம் நடந்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கடத்திக் கொண்டு செல்வது தெரியவந்திருக்கிறது.

k1

 வாகனத்தில் கடத்திவரப்பட்ட ஆறு கழுதைகளும் வேலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.  தப்பியோடிய நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.   அந்த  அந்த வேன் டிரைவரிடம் விசாரித்தபோது உடல் வலிமைக்கு நல்லது என்று ஆந்திராவில் கழுதைகறி விரும்பி சாப்பிடுவதாகவும்,  அறிவியல்பூர்வமான காரணங்கள் இல்லை என்றாலும் இதை விரும்பி சாப்பிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கழுதை கறி சாப்பிடுவது சட்டப்படி குற்றம் என்றும்,  அதை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆந்திர மாநில அரசு எச்சரித்திருக்கிறது . ஆனாலும் கறிக்காக நிறைய விரும்புபவர்கள் இருப்பதால் தமிழ்நாடு ,மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.  ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இருந்து கொண்டு செல்லப்படும் இந்த ஆறு கதைகளும் அவளிடமிருந்து முறையாக பணம் கொடுத்து வாங்கிச் செல்லவில்லை.  திருடி சென்றது தெரிய வந்திருக்கிறது.

 இதையடுத்து  ஆரணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க,  அவர்கள் அப்பகுதியினர் கழுதைகளை காணவில்லை என்று புகார் கொடுத்து இருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களை வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்கள் வந்ததும் விசாரித்து கழுதைகளை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.