யாரும் பயப்பட வேண்டாம்..! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு.!
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என தகவல் பரவியதால் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. விடிய விடிய காத்திருந்து தங்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.
ஆனால் போதுமான அளவு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் கையிருப்பில் இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆபத்தான வகைகளில் பாட்டில்கள், கேன்களிலும் பெட்ரோல் டீசலை அதிகளவு வாங்கி செல்லும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு அடுத்த 90 நாட்களுக்கு இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க நிர்வாகி முரளி கூறுகையில், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இல்லையெனவும் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகவில்லை என கூறியுள்ளார்.
தமிழகத்தில் 21 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் உள்ளது. மேலும் தமிழகத்திற்கு மூன்று எண்ணெய் நிறுவனங்களின் மூலம் பெட்ரோல் டீசல் சப்ளை செய்யப்படுகிறது. அங்கு 21 நாட்களுக்கு தேவையான கையிருப்பு உள்ளது. எனவே பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான தற்போது சூழல் இல்லையென கூறியுள்ளார்.

