நீங்க தான் நாளைய வாக்காளர்கள் ; காசு வாங்கீட்டு ஓட்டு போடாதீர்கள் - மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

 
t

நடிகர் விஜய் 12ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை இன்று சந்தித்துள்ளார். சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டுள்ள அவர், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கி கௌரவப்படுத்தினார். 

விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சிஇந்நிலையில் கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசிய போது, பொறுப்புணர்ச்சி வந்தது போல் உணர்கிறேன்.  பள்ளியில் நான் சராசரி மாணவர்தான்.  சினிமா நடிப்பு என்று என் பயணம் இருந்தது.  ஒருவேளை... சரி விடுங்க, அது இப்ப எதுக்கு?

vijay awards

ஒரு படத்துல இந்த வசனத்தை கேட்டேன் காடு இருந்தா வாங்கிப்பாங்க,  பணம் இருந்தா பிடுங்கிப்பாங்க கல்வியை மட்டும் யாராலும் நம்மிடமிருந்து புடுங்க முடியாது என்ற இந்த வசனம் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.   அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கான நேரம் தான் இது. என்னோட கனவு அனைத்தும் சினிமா நடிப்பு அதை நோக்கியே பயணம் செல்கிறது.

tn

அம்பேத்கர் ,பெரியார், காமராஜர் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்தையும் நம்பாமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.  நாளைய தலைவர்களை தேர்ந்தெடுப்பவர்கள் நீங்கள் தான்;  உங்கள் பெற்றோர்களிடம் பணம் வாங்காமல் வாக்கு செலுத்துமாறு கூறுங்கள் என்றார்.