"கன்னியாகுமரிக்கு விரைவில் இரட்டை ரயில் பாதை" - பிரதமர் மோடி

 
modi

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் நடைபெறும் பாஜக பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி; பிரதமர் மோடிக்கு பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றனர்.

பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி,  “என் அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே.. வணக்கம்!" தமிழில் உரையை தொடங்கினார். நாட்டை துண்டாட வேண்டும் என நினைப்பவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்; மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பல்வேறு ஊழல்கள் அரங்கேற்றப்பட்டன; கேலோ இந்தியாவை நாம் நடத்துகிறோம், அவர்கள் காமன்வெல்த் போட்டியில் ஊழல் |செய்தார்கள்; நாங்கள் 5ஜி கொண்டு கொண்டுவந்தோம், அவர்கள் 2ஜி ஊழல் செய்தார்கள் திமுக, காங்கிரஸ் உள்ள இந்தியா கூட்டணியை விட பாஜகவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். கன்னியாகுமரி எப்போதும் பாஜகவிற்கு ஏராளமான அன்பை கொடுக்கிறது; மார்த்தாண்டம் - பார்வதிபுரம் மேம்பாலத்தை அமைத்துக் கொடுத்தது பாஜக அரசுதான்; குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டை ரயில் பாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். 

தமிழ்  மொழியை கற்றுக் கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது; தொழில்நுட்பத்தின் உதவியுடன் இனி நான் உங்களுடன் தமிழில் பேச உள்ளேன்; நமோ செயலி இனி தமிழ் மொழியிலும் செயல்படும்.  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக இனி எனது அனைத்து உரைகளையும் நீங்கள் தமிழில் கேட்கலாம் என்றார்.