திமுக ஆட்சியில் அதிகார மிக்க பதவிலிருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

 
ச்

ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் வருவாய்த்துறை நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில நிதித்துறை செயலாளராக சித்திக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாதுரை ஐஏஎஸ், முதலமைச்சர் விஜய்யின் 3வது தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வளர்ச்சி, கலாச்சாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் மாற்றப்பட்டு சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த அமுதா மாற்றப்பட்டு முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், அமுதா ஐ.ஏ.எஸ் ஆகியோருக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்படவில்லை