அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், நேற்று முன்தினம்   ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

அதேபோல் சென்னையில் நேற்று   ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனையானது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது.கிராமுக்கு ரூபாய் 20 குறைந்துள்ள நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,530 ஆக விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆனது 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.