‘100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட நாகரிகம் என்றார் ஜான் மார்ஷல்’ - முதல்வர் ஸ்டாலின் நன்றி..

 
stalin


சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதைஒட்டி, அதனை அறிவித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1924 செப்டம்பர் 20 அன்று , சர் ஜான் மார்ஷல் அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்து அறித்தார். இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்தார். ஜான் மார் அவர்களது பங்களிப்பை நன்றிப்பெருக்குடன் நோக்கி அவருக்கு இந்நாளில் நன்றி கூறுகிறேன்.  

Indus Valley Civilization

சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானர்த்துடன் அதனை அவர் திராவிட இனத்துடன் தொடர்புபடுத்தினார். திராவிட மொழி பேசும் மக்கள் ஆரியத்திற்கு முன்னோடி என நூற்றாண்டு முன் உலகிற்கு சொன்னவர் ஜான் மார்ஷல். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டினை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்தப்படும் என்றும், சர் ஜான் மார்ஷல் அவர்களின் முழு உருவச் சிலை தமிழ்நாட்டில் நிறுவப்படுமென்றும்   அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.