‘இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக திராவிட மாடல் அரசு துணை நிற்கும்’ - இளைஞர் தின வாழ்த்து கூறிய உதயநிதி..!!
இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டின் விடியலுக்காக, இளைஞர்களால் உருவான பேரியக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் நம் கழகம்தான். இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி - வேலைவாய்ப்பு -பொருளாதார சமநிலை பெற தொடர்ந்து போராடும் பேரியக்கத்தின், இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில், தமிழ்நாட்டின் நாளைய தலைவர்கள் அனைவருக்கும் சர்வதேச இளைஞர் தின வாழ்த்துகள்!
இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும். எதிர்காலம் நமக்கானது. உயர்ந்த கனவுகளோடு, அயராது உழைப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார். \

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், திராவிட மாடல் திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்வதாகவும், 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நான் முதல்வன், தமிழ் புதல்வன், ஸ்டார்ட் அப் டிஎன், புதுமைப்பெண் உள்ளிட இளைஞர் நலன் சார்ந்த திட்டங்களை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தியா முழுவதும் உள்ள 1,40,00 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 8% நிறுவனங்கள் அதாவது 11 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் தமிழகத்தில் தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 8,500க்கும் மேற்பட்டவை கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை ஆகும். இதில் 50 % மேலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தலைமையேற்று நடத்துவது பெண்கள் தான்.
கடந்த 4 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 63,000 இளைஞர்களும் பல்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. மேலும் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் விடியலுக்காக, இளைஞர்களால் உருவான பேரியக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் நம் கழகம்தான். இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி - வேலைவாய்ப்பு -பொருளாதார சமநிலை பெற… pic.twitter.com/STpzVQaeeu
— Udhay (@Udhaystalin) August 12, 2025


