மதுபோதையில் தள்ளாடியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர்- நடுவழியில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓய்வு!

 
ச் ச்

பொள்ளாச்சியில் இருந்து சிவகாசி சென்ற அரசு பேருந்தை மது போதையில் தள்ளாடியபடி இயக்கிய ஓட்டுனர் நடுவழியில் பேருந்த இயக்க முடியாமல் நிறுத்தி பேருந்தில் மது போதையில் மயங்கியதால் பேருந்து பயணிகள் பீதியடைந்தனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி செல்வதற்காக அரசு பேருந்து புறப்பட்டு உள்ளது. இதில் 40 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.இந்த அரசு பேருந்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மூர்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பேருந்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து கிளம்பி சிறிது தூரம் சென்றதும் சாலையில் தாறுமாறாக பேருந்து ஓட்டுநர் ஒட்டியுள்ளார். இதை கண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது, மது போதையில் உளறியபடி பேருந்து அஜாக்கிரதையாக இயக்கியுள்ளார். இதைக் கண்ட பயணிகள் அனைவரும் கூச்சலிட்டதால், பேருந்தை ஓட்டுனர் இயக்க முடியாமல் நடுவழியில் நிறுத்தி, மது போதையில் மயங்கியபடி பேருந்தில் ஸ்டீரிங்கின் மேல் படுத்து உறங்கி உள்ளார்.


பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் சோதனை செய்ததில் ஓட்டுநர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நடுவழியில் தவித்து நின்ற பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.