சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை

 
drone camera

சென்னையில் நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

drone

சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சியும் நடைபெற உள்ளது. இதனால் 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் வருகை தருவதையொட்டி, நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.