மோடி வருகை- ராமேஸ்வரத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை

ராமேஸ்வரத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் செங்குத்தாக தூக்கக்கூடிய தூக்கு பாலம் கடந்த ஒரு மூன்று ஆண்டுகளுக்கு மேல நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ராமேஸ்வரத்துக்கு வருகை தந்து பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ரயில் சேவையை ராமேஸ்வரத்திற்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமரின் வருகை ஒட்டி பாதுகாப்பு பணிக்காக 10 எஸ்பி, 15 டிஐஜி, 40 டிஎஸ்பி உள்ளிட்ட 3500 போலீசாரை உட்படுத்தி மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, ஏப்.6ல் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.