போதைப்பொருள் வழக்கு - ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

 
போதைப்பொருள் வழக்கு - ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! போதைப்பொருள் வழக்கு - ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

போதைப்பொருள் விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த  பிரதீப் குமாரை போலீஸார் கைது செய்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், அதிமுக முன்னாள்  ஐடி விங் நிர்வாகி பிரசாத்,  நடிகர் ஸ்ரீகாந்த் என அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.   இதில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவரை கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

krishna

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் கிருஷ்ணாவும் இந்த வழக்கில் சிக்கினார்.  அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் வாங்கியதாக  பிரதீப் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனையடுத்து 2 நாட்கள் நடத்தப்பட்ட விசாராணைக்குப் பின்னர் நடிகர் கிருஷ்ணாவும் , வளசரவாக்கத்தைச் சேர்ந்த அவரது நண்பர் கெவின் ஆகியோரை கடந்த 26ம் தேதி போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.  

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தனித்தனியே ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி தர்மேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணா  தரப்பில்,  மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாவிட்டதாகவும், வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலுல் எந்த போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை எனவும், கிருஷ்ணாவை கைது செய்தது அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் வாதாடினர்.  

நடிகர் ஸ்ரீகாந்த்

இதேபோல் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  போலீஸார் சோதனையில் வீட்டிலிருந்து எந்த போதைப்பொருளும் கைப்பற்றடவில்லை என்றும், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கும்,  அதை பதுக்கி விற்பனை செய்வதற்கும் வித்யாசம் இருப்பதாகவும் , ஸ்ரீகாந்த் போதைப்பொருளை வைத்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார். அதேநேரம் காவல்துறை தரப்பில் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.  அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.