போதைப்பொருள் வழக்கு - ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமின்

 
tt

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக  சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

jaffer

போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னால் திரைப்படதயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் தலைமறைவாகினர்.  பின்னர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக்கும் அவரது நான்கு கூட்டாளிகளும் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

tn

இந்நிலையில்  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்குக்கு ஜாமின் வழங்கி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண் மற்றும் பாஸ்போர்டை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும். ஜாமின் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகி உள்ளதால் ஜாஃபர் சாதிக் சிறையில்தான் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.