சென்னையில் இன்ஸ்டா, பேஸ்புக் மூலம் போதைப்பொருள் சப்ளை! 30 கிராம் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி
சென்னை கொத்தால்சாவடி பகுதியில் கடந்த வாரம் இரண்டு நபர்கள் போதைப்பொருள் விற்பனை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கொத்தால்சாவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை மேற்கொள்வதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மனுஷ் மற்றும் ரோகித் ஆகிய இருவரை கடந்த 13ஆம் தேதி கொத்தவால்சாவடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்பது குறித்தான தகவல்களை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா என்கிற செல்வகுமார் (39) திருவல்லிக்கேணி முகமது சித்தீக் (35) மண்ணடி பகுதியை சேர்ந்த ஹபீப்(26) ஏழு கிணறு பகுதியை சேர்ந்த தர்ஷன் (25) ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்த 77 கிராம் மெத்தபட்டமையின் போதை பொருள் 450 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இவை அனைத்தும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள முகமது சித்திக் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் மூலமாக போதைப்பொருள் குறைந்தபட்சம் 30 கிராம் ஆர்டர் செய்தால் உடனுக்குடன் அப்பகுதியில் சென்று நேரடியாக விற்பனை செய்யும் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடத்தி வருவதாகவும் பெங்களூரில் இருந்து ரயில் மூலமாகவும் கார் மூலமாகவும் மொத்தமாக கொள்முதல் செய்துவிட்டு இங்கு சில்லறை வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது. நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொத்தவால்சாவடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்து வேறு யாருக்கெல்லாம் இந்த போதை பொருள் விற்பனையில் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


