தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்!!

 
rain

 தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

இன்று முதல் 23ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இன்று மற்றும் நாளை உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகவும் காணப்படும்.

rain

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு விமானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலை 21 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

rain

அந்தமானுக்கு பூமத்திய ரேகை ஒட்டிய பகுதிகளில் அவை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த தேதிகளில்  மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.