“கூடுதல் தொகுதி வேண்டும் என்ற ஆசை உள்ளது, 12 எம்.எல்.ஏக்கள் இருக்கணும்” - துரை வைகோ
Jun 21, 2025, 15:00 IST1750498222000
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல் என்று வெளியான செய்திக்கு துரைவைகோ மறுப்பு கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக எம்.பி., “வரும் தேர்தலில் கூடுதல் தொகுதி வேண்டும் என ஆசை உள்ளது. 12 தொகுதிகளில் மதிமுக போட்டியிட வேண்டிய நெருக்கடி உள்ளது. 12 எம்.எல்.ஏக்கள் இருந்தால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் தொகுதி தேவையென ஆசை இருந்தாலும் தலைமையே முடிவு செய்யும். வியாபார அரசியலில் ஈடுபட மாட்டோம். சுயமரியாதை எங்களுக்கும் உண்டு. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகாது. வியாபார அரசியலில் மதிமுகவுக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.


