துரை வைகோ விலகல் ஏற்க மறுப்பு
மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த துரை வைகோவின் ராஜினாமாவை அக்கட்சியின் தலைமை ஏற்கவில்லை.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த பதவி விலகலை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்காத நிலையில், இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் துரை வைகோ விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது என மதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும் முதன்மை செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கூறினார். பதவி விலகலை தலைமை ஏற்காத நிலையில் மதிமுக தீர்மான அறிக்கையில், முதன்மை செயலாளர் துரை வைகோ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது


