வருகிற 18ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
Dec 3, 2024, 13:18 IST1733212138666
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 18ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 18-12-2024 புதன்கிழமை காலை 10.00 மணி அளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


