விடுமுறை நாட்களில் திரு.வி.க. பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

 
tn

திரு.வி.க. பூங்கா விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

tn

திரு.வி.கா பூங்கா இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத் தலைநகர் சென்னையிலுள்ள ஷெனாய் நகரில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்காவாகும். பூங்கா முதலில் சுமார் 8.8 ஏக்கர் பரப்பளவில் 300 மரங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 6.4 மில்லியன் டாலர் செலவில் பூங்காவை புதுப்பித்தது. அப்போது சில தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக பூங்கா திறக்கப்பட்டது. இருப்பினும், 2011 ஆம் ஆண்டில் பூங்காவின் கட்டுமான பணிகள் காரணமாக மீண்டும் மூடப்பட்டது. இதை தொடர்ந்து  திரு.வி.க பூங்கா 12 ஆண்டுக்குப் பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.   8.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் 5400 மரங்கள் நடப்பட்டு நன்கு வளர்ந்துள்ளது.
tn

இந்நிலையில்  சென்னை ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க. பூங்கா விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் திறக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5 மணியில் இருந்து 10 மணி வரை பூங்கா திறந்திருக்கும்.  வழக்கமாக திரு.வி.க. பூங்கா காலை 5 மணியில் இருந்து 9 மணி வரை திறந்திருக்கும். தற்போது விடுமுறை நாட்களில் மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக திறக்கப்பட உள்ளது.