அமித் ஷா வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் - மின்சார வாரியம் உத்தரவு

 
Amit Shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடை பயணம் மேற்கொள்கிறார். என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார்.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தை அண்ணாமலை  ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தமிழகம் வருகிறார். 

eb

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார பொறியாளர்களுக்கு தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் நிகழ்வுகளில் தடையில்லா மின்சார வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்திருந்த போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மின்சார வாரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.