மின்வாரிய ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு??...

 
மின்சாரம் இல்லையா? மின்சார வாரியம் அறிவித்த இலவச புகார் எண்கள்! 

மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதைக்  கண்டித்து தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். 

  2003ஆம் ஆண்டில் மின்சார சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து புதிய மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு  நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக உத்தேசித்திருக்கும் புதிய மின்சார சட்ட முன்வடிவை கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மின்கட்டணம் செலுத்த இதுவே கடைசி நாள்? காலக்கெடுவை நீட்டித்த  மின்சார வாரியம் !

மேலும், மின்சார சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த முடிவு, தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும்  உள்ளதாக குறிப்பிட்டிருந்த அவர், மாநில அரசு நிறுவன செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாக தெரிகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

மின்வாரிய ஊழியர்கள்

இந்நிலையில், இந்த மின்சார சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து தமிழக மின்வாரிய ஊழியர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும்,  அதே நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.