மதுரையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தியதன் எதிரொலி- அதிகாரிகள் பணியிட மாற்றம்
மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தியதன் எதிரொலியாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாட்டு்த்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் அமருமிடம், காத்திருப்பு அறை, கழிவறை ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தியதன் எதிரொலியாக பணியில் தொய்வாக இருந்த அரசு அலுவலர்கள் 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,
வட்டாட்சியர், பிடிஓ, சுகாதார ஆய்வாளர், ஆதிதிராவிட நலத்துறை சமையலர் ஆகியோர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.