தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் ED ரெய்டு..!!

 
தொழில் அதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் ED ரெய்டு..!! தொழில் அதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் ED ரெய்டு..!!

தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

அனில் அம்பானி மோசடி நபர் என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்திருந்த நிலையில்,  அடுத்த நாட்களிலேயே அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அனில் அம்பானியின் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  

ரிலையன்ஸ் குழும தலைவர் அணில் அம்பானியின் குழுமத்தின் கீழ் உள்ள RAAGA நிறுவனம் யெஸ் (YES)வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளன. ரூ.12,800 கோடி கடன் பெற்றிருக்க, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. கடன் தொகையையும், வட்டியையும் திருப்பி செலுத்துவதில்  மோசடி செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

RAID TTN

இதனிடையே பணமோசடி வழக்கு தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியும்  நேற்று,  அனில் அம்பானி மோசரி  அறிவித்திருந்த நிலையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில்,  சிபிஐ பதிவு செய்த இரண்டு எஃப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை  இந்த சோதனைகளை நடத்தி வருகிறது. டெல்லி மற்றும் மும்பையில் 35 இடங்களில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. 25க்கும் மேற்பட்ட நபர்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.