ரித்தீஷ் என்பவரின் வீட்டிற்கு சீல் வைத்த அமலாக்கத்துறை!

 
house house

சென்னை எம்.ஆர்.சி. நகரில் ரித்தீஷ் என்பவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். 

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீடு, சூளைமேட்டில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகம், ராயப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள டான் பிக்சர்ஸ் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் ரித்தீஷ் என்பவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பலமுறை ரித்தீஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமலாக்கத் துறையினர் போனில் தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கும் வகையில்,  அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளனர்