நிதிஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

 
1 1

 பீகார் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

துணை முதல் மந்திரியாக இருந்த பாஜகவின் சமராட் சவுத்ரி மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.பாஜக, லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கும் நிதிஷ் குமார் கேபினட்டில் இடம் ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில் பீகாரில் 10வது முறை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'பீகாரில் இன்று பதவியேற்றுள்ள நிதிஷ்குமார், என்டிஏ கூட்டணிக்கு வாழ்த்துகள். இந்த அங்கீகாரம் மக்களின் நம்பிக்கையையும், தொடர்ச்சியான நிலைத்தன்மை, வளர்ச்சிக்கான அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. நல்லாட்சி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை வழங்க வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.