அதிமுக எழுச்சி மாநாடு குறித்து மாவட்டங்களில் ஆலோசனை - எடப்பாடி பழனிசாமி..

 
ep


அதிமுக ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்புடைய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.  இந்த மாநாடு சிறப்புடனும், எழுச்சியுடனும் நடைபெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மூத்த தலைமை கழக செயலாளர் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு பின்வரும் கால அட்டவணைப்படி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை வழங்க உள்ளார்கள்.

1. 28.7. 2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஏ.பி. ஷா மஹால் & ரெசிடென்சி,  உலகநாதபுரம்,  பரமக்குடி தாலுகா - 623 707.

* பிற்பகல் 2:30 மணிக்கு சிவகங்கை மாவட்டம் ‘முத்து மஹால்’ சிவகங்கை.

2. 29.7. 2023 (சனிக்கிழமை) காலை 10:30 மணி விருதுநகர் மாவட்டம் ‘ஜாபோஸ் காஞ்சனா திருமண மண்டபம்’, திருத்தங்கல் மெயின் ரோடு சிவகாசி.

* பிற்பகல் 3 மணி தூத்துக்குடி மாவட்டம்  ‘மாணிக்கம் மஹால்’ திருச்செந்தூர் ரோடு,  காமராஜர் கல்லூரி எதிரில்,  தூத்துக்குடி.

3. 30.7.2023 ( ஞாயிற்றுக்கிழமை ) காலை 10.30 மணி திருநெல்வேலி மாவட்டம்  ‘மாதா மாளிகை’,கே.டி.சி.நகர்,  தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை,  திருநெல்வேலி.

அதிமுக எழுச்சி மாநாடு குறித்து மாவட்டங்களில் ஆலோசனை - எடப்பாடி பழனிசாமி..

* பிற்பகல் 3 மணி தென்காசி மாவட்டம் ‘இசக்கி மஹால்’,தென்காசி - திருநெல்வேலி மெயின் ரோடு, வாய்க்கால் பாலம், தென்காசி-627 814.

4. 31/7/2023 ( திங்கள் கிழமை) காலை 10 மணி தேனி மாவட்டம்  ‘வி.கே.வேலுச்சாமி திருமண மண்டபம்’, தேனி முனிசிபல் ஆபீஸ் எதிரில்.

* பிற்பகல் 3 மணி மதுரை மாவட்டம் ‘மாநாட்டு மைதானம்’,  கருப்புசாமி கோயில் எதிரில்,  வளையங்குளம் ரிங் ரோடு, மதுரை.

5. 01.08.2023 (செவ்வாய்க்கிழமை)  காலை 10:30 மணி புதுக்கோட்டை மாவட்டம் ‘மகாராஜா மஹால்’ புதுக்கோட்டை.

* பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி மாவட்டம் ‘எஸ்.பி.எஸ்.மஹால்’,  கருமண்டபம்,  திருச்சி.

6. 02.08.2023 (புதன்கிழமை) காலை 10 மணி கன்னியாகுமரி மாவட்டம் ‘ஒய்.ஆர்.மஹால்’,வாட்டர் டேங்க் ரோடு,  நாகர்கோவில் -  629 001.

சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து, ஆலோசனை கூட்டங்களில் தத்தமது மாவட்டங்களில் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் நிர்வாகிகள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும்,  ஆலோசனைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெறும் வகையில் முழு ஒத்துழைப்பினை நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.