“எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்”- பிரபல ஜோதிடர் கணிப்பு?

 
sads sads

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என நான் கணித்ததாக வார இதழில் வெளியானது தவறான செய்தி ஜோதிடர் ரிஷியானந்தா மறுப்பு தெரிவித்துள்ளது. 

EPS Gets Legal Leg-Up In AIADMK Leadership Wrangle Against OPS

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது மனைவியுடன் தம்பதி சமேதராக திருப்பூரைச் சேர்ந்த தென்னரசு என்கிற ரிஷியானந்தாவிடம் ஜோதிடம் பார்த்ததாகவும், அதில் எடப்பாடி யாருக்கு ராஜயோகம் உள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகும்  யோகம் உள்ளதாக ரிஷியானந்தா கூறியதாக பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் தான் இது போன்று எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி தான் இதுவரை சந்தித்ததே இல்லை என ரிஷியானந்தா திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து மறுப்பு தெரிவித்தார். மேலும் தன்னிடம் திமுக அதிமுக என அரசியல் பாகுபாடு இன்றி பலர் வரும் நிலையில், நானும் கட்சி சார்ந்து செயல்பட மாட்டேன் எனவும் இதுபோன்று யார் வெற்றி பெறுவார்கள் என அறிவித்தால் அது தேர்தலின் போது தாக்கத்தை கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால் தான் இது போன்று செய்ய மாட்டேன் என தெரிவித்தார். மேலும் தவறான செய்தி வெளியிட்ட நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெறுவார் என ஜோதிடர் ஒருவர் தெரிவித்ததாக வெளியான செய்திக்கு அந்த ஜோதிடரே மறுப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.