இரண்டாம் நாளாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் எடப்பாடி பழனிசாமி!

 
“முதல்வர் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாரா?” – கேட்கும் எடப்பாடி மக்கள்! #edappadi

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலைகளிலும் குடியிருப்புகளிலும் வெள்ள நீர் புகுந்து மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், பெரம்பூர், வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் அந்த இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

eps

சென்னையின் மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளது. மணலி, தாம்பரம் மற்றும் பெரும்புலிபாக்கத்திற்கு தலா ஒரு குழு என 3 பேரிடர் மீட்பு படை சென்னைக்கு விரைந்துள்ளது. மேலும் 3 குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. சென்னையின் மழை பாதிப்புகளை நேரில் சென்று 3வது நாளாக இன்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர் பகுதியில் ஆய்வு செய்த அவர் மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். 

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் நாளாக இன்று சென்னையின் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். ஆர்.கே நகர், யானைகவுனி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். நேற்று அவர் சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.