சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் ? எடப்பாடியின் அடுத்த மூவ்...!!

 
eps

மதுரையில் அண்மையில்  செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அதிமுகவில் சசிகலாவுக்கு இடம் உண்டா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் , தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து கூடிப்பேசி சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாமா ?வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்வார்கள் என்றார். ஓபிஎஸ்  கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ops eps

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் ஓபிஎஸ் கருத்துக்கு எதிராக எதிர்வினையாற்ற தொடங்கினார்.  சசிகலாவை முதன்முதலில் எதிர்த்தவர் ஓபிஎஸ் தான்.  சசிகலா  எதிர்த்து  தான் அவர் தர்மயுத்தத்தை நடத்தினார்.  சசிகலாவுக்கு நிச்சயம் அதிமுகவில் இடமில்லை என ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

ops eps

அதே சமயம் எப்போதும் நிதானமாக பேசக்கூடியவர் . சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ்  கருத்து சரியானதே என்று டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் கருத்தினால் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம். இந்த சூழலில் சசிகலாவுக்கு ஆதரவாக  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் சேலம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை  சந்திக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இதில் ஈபிஎஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது விரைவில் தெரியவரும்.முன்னதாக  அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை பொதுச்செயலாளர் என்ற பெயரில் ஏற்றிவைத்த சசிகலா,  சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க சசிகலா புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .