அதிமுகவில் கோஷ்டி மோதல்- கள ஆய்வு நிறுத்தம்?

 
eps

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுபடி மாவட்ட வாரியாக கள ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்திற்கு கள ஆய்வு நடத்த நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து நெல்லை சந்திப்புப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டு நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் இந்நாள் மாவட்ட செயலாளர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு கைகலப்பு வாக்குவாதம் வரை சென்றது. இதனை தொடர்ந்து கட்சி தொண்டர்களை எஸ்பி வேலுமணி சமரசம் செய்து வைத்தார். இதேபோல் கும்பகோணத்திலும் அதிமுக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது.

e

இந்நிலையில் கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வுக்கு சென்ற குழு முன்னிலையிலேயே அதிமுகவினர் கோஷ்டியாக பிரிந்து பிரச்னையில் ஈடுபட்ட சம்பவங்களை தொடர்ந்து தற்காலிகமாக கள ஆய்வை நிறுத்தி வைக்குமாறு தான் அமைத்த குழுவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழியாக அறிவுறுத்தல் என தகவல் வெளியாகியுள்ளது.