அதிமுக வெளிநடப்பு ... 'எதிர்க்கட்சிக்கு மரியாதை இல்லை' என ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!

 
tn

சட்டம் ஒழுங்கு குறித்து பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

tn

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , "தமிழக சட்டப்பேரவையில் கருத்துக்களை சொல்ல விடாமல் தடுத்து விடுகின்றனர்.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடமை தவறி  செயல்படுகிறார்.  பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பினால் அது நிதியமைச்சர் புறக்கணிக்கிறார். சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பேசிய போது நிதியமைச்சர் வெளியேறிவிட்டார்; இது எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்தும் செயல்.  ஓபிஎஸ் கருத்துக்கு பதிலளிக்காமல் நிதியமைச்சர் வெளியேறுவதா? அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தை நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார்" என்றார்.

tn

தொடர்ந்து பேசிய அவர், "  2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் வெளியான அறிவிப்புகளின் உண்மை நிலையை முதலமைச்சர் மறைத்துவிட்டார். நிதியமைச்சர் தந்த புத்தகத்தில் அதன் உண்மை நிலை இடம்பெற்றுள்ளது. அஇஅதிமுக அளித்த வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் " என்றார். முன்னதாக ஓபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே கோப்புகளை வீசி எறிந்துவிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிநடப்பு செய்ததாக ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளதுடன்,   நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிநடப்பு செய்து அவமதித்து விட்டதாக ஆதங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது