கைவிலங்கு இல்லாமல் அவசர அவசரமாக அழைத்து சென்று என்கவுன்டர்... சந்தேகமா இருக்கு- ஈபிஎஸ்

 
அதிமுக எடப்பாடி பழனிசானி ( இபிஎஸ் )

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சரணடைந்த நபரை அவசர அவசரமாக சுட்டுக்கொன்றது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

EPS

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சரணடைந்தவரை ஏன் என்கவுன்டர் செய்ய வேண்டும்? அதிகாலையிலயே ஏன் கைவிலங்கு அணிவிக்காமல் அழைத்து செல்ல வேண்டும்? என்கவுன்டரில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலம் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பொன்முடி தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

கர்நாடக அரசு உரிய நீரை தமிழகத்திற்கு வ்ழங்க வேண்டும். விவசாயிகளை பற்றி கவலைப்படாத அரசு திமுக. காவிரி நீருக்காக திமுக அரசு எவ்வித குரலும் கொடுக்கவில்லை” என்றார்.