கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்குக- எடப்பாடி பழனிசாமி

 
எடப்பாடி

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது விடியா திமுக அரசு அறிவித்துள்ள 6,000/- ரூபாய் நிவாரணத் தொகையை 15,000/- ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வாரம் பெய்த கனமழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டபோது, விடியா திமுக அரசின் முதலமைச்சரோ மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி, தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டார். 


கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது விடியா திமுக அரசு அறிவித்துள்ள 6,000/- ரூபாய் நிவாரணத் தொகையை 15,000/- ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், மேலும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்வற்றை உரிய முறையில் அகற்றி, நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாகத் துவங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.