கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்: அண்ணாமலை!

 
1

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே திமுக – பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆக. 18  விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய அண்ணாமலை, கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா தொடர்பாக அதிமுக அரசியல் பேசுவது வேதனை அளிக்கிறது. கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடத்தியதைப்போல, ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்த அதிமுக விரும்பினால் அனுமதி தரப்படும்.

நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை விட 5 மடங்கு வழக்கு என் மீது உள்ளது என அண்ணாமலை குறிப்பிட்டார்.