கக்கன் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி..

 
ep

தியாக சீல கக்கன் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
மதுரை மாவட்டம் மேலூர் மாவட்டம் தும்பை பட்டி கிராமத்தில் 1907ம் ஆண்டு ஜூன் 18ல் பூசாரி கக்கன் - குப்பி தம்பதியின் மகனாக பிறந்தவர் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கக்கன், சிறுவயது முதலே பல தடைகளை எதிர்கொண்டு உயர்ந்தவர்.  பின்னாளில் அவர் அமைச்சராக இருந்த போதும் நேர்மையையும், எளிமையையும் கக்கன் ஒரு போதும் கைவிட்டதில்லை. தான் சுதந்திர இந்தியாவின் காவல்துறை அமைச்சராக இருந்த போது தன் சொந்த தம்பிக்கு நேர் வழியில் கிடைத்த காவலர் பதவியில் சேர கூட முட்டுக்கட்டை போட்டார் கக்கன். அந்த அளவிற்கு வாழ்நாள் முழுவதும் நேர்மையை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்தவராக இன்றளவும் போற்றப்படுபவர். இன்று கக்கன் அவர்களது பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்துள்ளார்.

கக்கன் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி..

 அவர் தனது பதிவில், “சுதந்திரப் போராட்ட வீரர், நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் என பலவற்றில் செயலாற்றி, முக்கிய பொறுப்புகள் வகித்து, தன் வாழ்நாள் முழுவதும்  நேர்மையான அரசியல்வாதியாகவும், மக்களுக்கு தொண்டாற்றுவதே  முழுநேர கடமையென கொண்டு,  எளிமையின் இலக்கணமாய் வாழ்ந்த தியாகசீலர் ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளில் அவரின் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.