‘உருட்டுகளும் திருட்டுகளும்’ பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி..

 
ep ep


திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.  

‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற தேர்தலுக்கு  இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தீவிரமாக தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் அவர், நேற்று 15வது நாளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.  

eps

இந்த நிலையில், இன்று ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்கிற பெயரில் புதிய பிரச்சார முன்னெடுப்பை அவர் தொடங்கி வைத்திருக்கிறார்.  தொடர்ந்து ‘பதில் சொல்லுங்க அப்பா’ என்கிற தலைப்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த காணொலியையும் அவர் வெளியிட்டார்.  

 இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. நேர்மையான கவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல. அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வர வேண்டுமோ அப்போது வரும். கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.  திமுகவினர் சென்று பிரதமரின் வீட்டு கதவை தட்டினால் மட்டும் சரியா? என்று கூறினார்.