பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி..

 
ep


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்  விறுவிறுப்படைந்துள்ள நிலையில்,   தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார். மேலும் தேர்தல் பணியாற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய  பணிக்குழுவையும் அமைத்தார். அதுமட்டுமின்றி  பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழுவினர்  மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

admk office

அப்போது வீடு, வீடாக சென்று வாக்காளர் சரிபார்க்கும் பணியை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இன்றுடன் வாக்காளர் சரி பார்ப்பு பணி நிறைவு பெறுகிறது. தேர்தல் தொடர்பான இந்த பணிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஈரோடுக்கு செல்லும் அவர், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் பூத் வாரியாக ஆய்வு மேற்கொள்கிறார்.  

eps

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் உள்ள 238  வாக்கு சாவடிக்கும் தேர்தல் பணிக்குழுவினர், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, உள்ளூர் பொறுப்பாளர்களுடன் சேர்ந்து அவர்கள்  வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அவர்கள் அனைவருடனும்  எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். அதில் பூத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள், கடந்த தேர்தலில் அந்த இடங்களில்  அ.தி.மு.க.வுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது; புதிதாக எத்தனை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்;  அந்த பூத்தில் உள்ள மக்கள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் அவர் விரிவாக கேட்டறிய இருக்கிறார்.