அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனு ஏற்பு

 
eps eps

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.  மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் காலை வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  .அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

ep


 
இந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது அவரது வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. நாளை வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான கால அவகாசம் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை தவிற வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே வரும் 24ம் தேதி நீதிமன்ற உத்தரவினை அடுத்து தேர்தல் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுமிறது.  இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தலை தடை செய்யக்கோரி அவசர வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்குவிசாரணை நேற்று நடந்தபோது, வரும் 24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அதுவரையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தது.